முகம் பளபளக்க புரூட் மசாஜ்
முதலில் கிளன்சிங் பிறகு மசாஜ், ஸ்கிரப், பேக் ஆகியவற்றை செய்து கொள்ள வேண்டும்.
கிளன்சிங்காக பாலை உபயோகப்படுத்தி முகம் முழுவதும் பூசி மெதுவாக இரண்டு நிமிடம் தேய்த்து பஞ்சைக் கொண்டு துடைக்க வேண்டும். இதனால் தோலினுள் படிந்திருக்கும் அழுக்கு நீங்கிவிடும்.
மசாஜ் செய்ய தயிரை உபயோகப்படுத்த வேண்டும். இது சூரியக்கதிர்களின் தாக்குதலால் ஏற்படும் சருமக் கருப்பைப் போக்கும். அதிக சத்தும் சருமத்திற்கு கிடைக்கும். தேனை பயன்படுத்தியும் மசாஜ் செய்யவேண்டும். பப்பாளி விழுதைச் சேர்த்து வறண்ட மற்றும் சாதாரண சருமத்தினர் மசாஜ் செய்ய உபயோகப்படுத்தலாம். தக்காளி, ஆரஞ்சு, கொய்யா, வாழைப்பழம் கலவையைக் கொண்டு மசாஜ் செய்தால் முகம் மிகவும் பளபளப்புடன் இருக்கும்.
மசாஜ் முடிந்தவுடன் ஸ்கிரப் செய்ய வேண்டும். வால்நெட், பாதாம் இவற்றை அரைத்து ஸ்கிரப்பாக பயன்படுத்த வேண்டும். சருமத்தில் அதிக கருப்பு வெள்ளை இருந்தால் சர்க்கரையைப் பொடித்து அத்துடன் சிறிது பப்பாளி விழுதை சேர்த்து முகத்தில் அழுத்தி தடவ வேண்டும்.
மசாஜ் முடிந்தவுடன் சிறிய டவலைக் கொண்டு வெந்நீரில் நனைத்து பொறுக்குமளவு சூட்டுடன் முகத்தின் மேல் போட்டு மூன்று நிமிடங்கள் கழித்து எடுக்க வேண்டும். இவ்வாறு இரண்டு அல்லது மூன்று முறை செய்ய வேண்டும். அவ்வாறு செய்ய இயலாதவர்கள் சிறிய பாத்திரத்தில் நீரை கொதிக்க வைத்து ஆவி பிடிக்க வேண்டும் வேப்பிலைகள் சிறிது சேர்த்து ஆவி பிடித்தால் மிகவும் நல்லது.
பேக் போட கேரட், ஆப்பிள், ஆரஞ்சு, உருளைக்கிழங்கு, தேன், வெள்ளரி, ஸ்ட்ராபெரி, பேரீச்சம் பழம், எலுமிச்சைச்சாறு சிறிதளவு இவற்றை அரைத்து பேக் போட்டு அரைமணி நேரம் கழித்து முகம் கழுவ வேண்டும். மேற்கூறியவற்றில் ஏதாவது இரண்டு அல்லது மூன்று சேர்த்து அரைத்தும் உபயோகப்படுத்திக் கொள்ளலாம். இந்த பேசியல் செய்த உடனேயே கண்கள் குளிர்ச்சியடையும். முகம் பளபளப்பாகவும் அழகாகவும், பொலிவுடனும் மாறும்.
மேலும் பர்பதற்கு